
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார், குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற குடிமைப்பணிகள் தொகுதி IV தேர்வு (குரூப் 4 தேர்வு) மையத்தினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் 28,651 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களில் கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், Mobile Unit, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.