'வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை; சென்னை என்ன ஆகுமோ?' - அரசுக்கு ராமதாஸ் கேள்வி

3 months ago 19

சென்னை: “வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read Entire Article