சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெஞ்சால் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத மழை பெய்திருப்பது உண்மை தான் என்றாலும், அவற்றை சமாளிக்கும் அளவுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் கட்டமைப்புகளையும் மீறி, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
The post வெள்ள மீட்பு பணிகளை அரசு விரைவுபடுத்த அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.