இன்னும் 6 மாதத்தில் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும்: எடப்பாடி பேட்டி

3 hours ago 2

ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வு, செயல்பாடு குறித்து கருத்துக்களும் கேட்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் பாஜ ஆட்சிக்கு வந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை பலமான கூட்டணி அமையும். உங்களை அழைத்து தெரிவிப்போம். இன்னும் 6 மாதம் போனால் கூட்டணி இறுதி வடிவம் பெறும். கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது.

அப்படித்தான் நாங்கள் கூட்டணி அமைப்போம். திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக அங்குள்ள மக்களை அழைத்துப் பேசி, சுமூக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மாநில அரசாங்கத்தின் கடமை. இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது குறித்து கேட்டபோது, ‘வாக்களித்த மக்கள் குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

The post இன்னும் 6 மாதத்தில் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும்: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article