வெள்ள நிவாரண நிதி வேண்டி அனைத்துக் கட்சிக் குழுவினர், முதல்வர் தலைமையில் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மழையால் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்கள் கடந்தும் இதுவரை மத்தியக் குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே, மாநில பேரிடர் நிதியிலிருந்துதான் ரூ.945 கோடியை வழங்கியது. இது மத்திய அரசின் நிதி இல்லை.