வெளியானது 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'லாவெண்டர் நேரமே' பாடல்

4 months ago 15

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடி இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் 2வது பாடலான 'லாவெண்டர் நேரமே' பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய் மற்றும் ஆதித்யா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Lavender days are here to captivate you. லாவெண்டர் நேரமே - #LavenderNeramae from KadhalikkaNeramillai out now. Listen to the enchanting 2nd single now.▶️ https://t.co/tSwKEL3PLNSung by @AdithyarkM #AlexandraJoy @actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_pic.twitter.com/OUxW8TNnnH

— A.R.Rahman (@arrahman) December 18, 2024
Read Entire Article