அந்தியூர்,ஜன.26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி சேத்துனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனன் (39). இவர் நேற்று முன்தினம் அந்தியூரில் உள்ள தேர் வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29), மாவிளக்கு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (40) ஆகிய இருவரும் வெளி மாநில லாட்டரி எண்களை வெள்ளைத்தாள்களில் எழுதி ரூ.200க்கு வாங்க வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த தொகையை ஸ்லீப்பர் காலனியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் கண்டிப்பாக லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு விழும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து அய்யனன் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ராஜ்குமார், நாகராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு வெள்ளை தாள்களில் வெளி மாநில லாட்டரி எண்கள் எழுதிய சீட்டுகளையும், ரொக்கம் ரூ.12 ஆயிரத்து 320யையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான முரளிதரனை போலீசார் தேடி வருகின்றனர்.
The post வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்க வற்புறுத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.