
சென்னை,
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வெற்றி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'ராஜபுத்திரன்' படம் வெளியானது. இதில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து நடிகர் வெற்றி தற்போது 'சென்னை பைல்ஸ் முதல்பக்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் அனீஷ் அஷ்ரப் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. 'ராஜபுத்திரன்' படத்தை போல இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.