நாகர்கோவில்: ஓடும் ரெயில் மீது கல்வீச்சு - சிறுமி காயம்

4 hours ago 1

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு நேற்று முன்தினம் மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர். இதில் ரெயிலில் பயணம் செய்த திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி மீது கல் விழுந்தது. இதனால் அந்த சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி, ரெயிலில் கல் வீசி தாக்கியதாக 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

 

Read Entire Article