
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் மூலம் பயணிக்கின்றனர்.
இதனிடையே, புனே ரெயில் நிலையத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காந்தி சிலையை இளைஞர் உடைக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
காந்தி சிலையை இளைஞர் உடைக்க முயன்றதை கண்ட பயணிகள், இது குறித்து ரெயில்வே போலீசில் தெரிவித்தனர். மேலும், அந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இளைஞர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுராஜ் சுக்லா (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்களில் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து இளௌஞர் சுராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.