வெற்றி பெறுவது கமலா ஹாரிசா, டிரம்பா... அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாஸ்டர்டாமஸ் கூறுவது என்ன?

2 months ago 14

நியூயார்க்,

வல்லரசு நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர். அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர்கள் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.

அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (5.11.2024) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் தேர்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், வெற்றி பெறுவது கமலா ஹாரிசா, டிரம்பா என்ற ஆவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாஸ்டர்டாமஸ் கூறுவது என்ன? என்று பார்ப்போம்.

ஆலன் லிச்மேன் என்பவர் வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர் மற்றும் அரசியல் கணிப்புகளை வெளியிடுபவராகவும் அறியப்படுபவர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது பற்றி அவர் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். தேர்தல் கருத்துக்கணிப்புகளை நெருப்பிலிட்டு பொசுக்குங்கள் என கூறும் அவர், இந்த தேர்தலில் ஒரு புதிய பாதை அமைக்கும் ஜனாதிபதி, முதல் பெண் ஜனாதிபதியாக கமலா ஹாரிசே வெற்றி பெற போகிறார்.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வழிவந்த முதல் கலப்பின ஜனாதிபதியை நாம் பெற இருக்கிறோம். அமெரிக்கா எதனை நோக்கி செல்கிறது என்பதற்கான அறிகுறி போன்றது இது. பெரும்பான்மையாக இருக்கிறவர்கள் விரைவாக சிறுபான்மையினராக ஆகும் நாடாக நாம் மாறி வருகிறோம். என்னை போன்ற வெள்ளையினத்தினரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்றார்.

அவருடைய கணிப்பு மாதிரியானது, வரலாற்று நடைமுறைகளை மையப்படுத்தி உள்ளது. தேர்தல்கள், பிரசார உத்திகள் அல்லது பல்வேறு இனங்களை கொண்ட மக்கள் தொகையோ வெற்றி வேட்பாளரை முடிவு செய்வதில்லை என கூறுகிறார்.

இதற்கேற்ப, 1981-ம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான 13 முக்கிய தகுதிகளுக்கான நடைமுறையை உருவாக்கினார். அதில் பிரசார தந்திரங்கள் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக, அரசு நிர்வாகமே அமெரிக்க தேர்தலை முடிவு செய்கிறது என அடையாளம் காட்டினார்.

1984-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வேட்பாளரை இவருடைய மாடல் சரியாக கணித்தது. தேர்தல் கணிப்புகளுக்கு, முன்கூட்டியே கணித்து கூறும் மதிப்பு எதுவும் இல்லை. அவை அனைத்தும் தவறுக்கான எல்லைக்குள்ளேயே அடங்கி விடுகின்றன என்கிறார்.

2016-ம் ஆண்டு தேர்தலின்போது, டொனால்டு டிரம்பை கணித்தேன். இதனால், 90 சதவீதம் ஜனநாயக கட்சியினரை கொண்ட வாஷிங்டன் டி.சி.யில் நான் பிரபலம் அடையவில்லை. தேர்தலின் போக்கு அனைத்தும் வேறு திசையிலேயே எப்போதும் இருக்கும்.

உண்மையில், ஹிலாரி கிளிண்டனுக்கே 99 சதவீதம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என பிரபலம் வாய்ந்த தேர்தல் தரவுகள் தொகுப்பாளரான பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கூட்டமைப்பு தெரிவித்தது என்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, நான் தேநீர் கோப்பை ஒப்புமையையே பயன்படுத்துகிறேன். தேநீரில் சர்க்கரையை போடுகிறீர்கள். அதில் தனிப்பட்ட சர்க்கரை மூலக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஆனால், இனிப்பு சுவை மற்றும் அதன் அடர்த்தி ஆகியவற்றை நீங்கள் அறியலாம். இதுவே அனைத்திற்கும் முக்கிய விசயங்கள் ஆகும் என்றார்.

அவர், தன்னுடைய கணிப்புகள் நிச்சய தன்மை கொண்டவை என்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் மழுப்பலாக கூறுபவை அல்ல என்றும் கூறுகிறார். இதனால், தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

Read Entire Article