தி.மு.க.வில் கூடுதல் இடங்கள் கிடைக்காவிட்டால் த.வெ.க.வுடன் கூட்டணி.. காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்

4 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த 2 நாட்களாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பின் போது மாவட்டத் தலைவர்கள் இல்லாமல் இருக்கும் 11 மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்ட பொறுப்பாளர்கள், ''நாம் காலம் காலமாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்த கூட்டணியால் அவர்கள் (தி.மு.க.) தான் பலமானார்களே தவிர நமக்கு எந்த பயனும் இல்லை. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற வேண்டும். அதே போன்று ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும். ஒருவேளை இதற்கு தி.மு.க. ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நடிகர் விஜய் புதிதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி மேலிடத்தில் நீங்கள் (கிரிஷ் சோடங்கர்) பேச வேண்டும்" என்று தெரிவித்து உள்ளனர்.

இதே போன்று, கவுன்சிலர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, சென்னை மாநகர மாமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து திரவியத்தை மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Read Entire Article