கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரியங்கா காந்தி எம்.பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த பல வருடங்களாக வெறுப்பில் இருந்த டெல்லி மக்கள் தற்போது மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். இத்தனை வருடங்கள் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர் என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மக்கள் மாற்றத்திற்கு விரும்புகின்றனர் என்பது தேர்தலுக்கு முன்பே நாங்கள் தெரிந்து கொண்டோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியடைந்தவர்கள் மேலும் கடுமையாக உழைத்து மக்களின் நன்மதிப்பை பெற முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.
The post வெறுப்பில் இருந்த டெல்லி மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி appeared first on Dinakaran.