வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்ய அனுமதி கோரிய மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

3 months ago 9

புதுடெல்லி: உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமன்றி பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும் இந்த வகை நோயால் ஆண்டுக்கு 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இறக்கின்றனர். ரேபிஸ் நோய் உயிரிழப்பு தற்போது இந்தியாவிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு தரப்பில் இருந்து ஒரு பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல், வாந்தி வருவதுடன் உணவு சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் சிரமம் எற்படும். அவர்களின் உயிரிழப்பு வேதனையானதாக இருக்கும். இந்த சூழலில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடுபவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

மேலும் கண்ணியம், கவுரவத்துடன் உயிரிழப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும் என்று கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு விரிவான தீர்ப்பை வழங்கி இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டோரை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் வினோத் சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வெறிநாய்க்கடி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதுதொடர்பான வழக்கை அடுத்த இரண்டு வாரத்தில் பட்டியலிட்டு விசாரணை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

The post வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்ய அனுமதி கோரிய மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு appeared first on Dinakaran.

Read Entire Article