வெறித்தனமான ஒர்க் அவுட்.. உடல் எடையை குறைத்த ரித்திகா சிங்

1 week ago 4

சென்னை,

தமிழில் 'இறுதிசுற்று' படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். அதன் பிறகு "ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, மழைபிடிக்காத மனிதன்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரித்திகா சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிக உடல் எடையில் இருந்த அவர், வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடை எப்படி குறைத்தார் என்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "கடந்த 3 மாதங்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏனென்றால் நான் இதுவரை இல்லாத அளவுக்கு எடை கூடிவிட்டேன். இதனால் எனக்கு முழங்காலில் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. என்னால் நகர முடியவில்லை, நடனம் கூட ஆட முடியவில்லை. அப்போதுதான் நான் கண்ணாடியில் என்னைப் பார்த்து, 'நீ இதுவரை பார்த்ததிலேயே சிறந்தவளாககத் தோன்ற வேண்டிய நேரம் இது' என எனக்கு நானே கூறிக்கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Read Entire Article