வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்

1 week ago 5

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 12 - 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். எனவே வெப்பத்தில் இருந்து மக்கள், மாணவர்களை பாதுக்காக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், மழை வெள்ளம் பேரிடராக அறிவிக்கப்பட்டது போல் தற்போது வெயில் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.  

Read Entire Article