வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு பிறகு ரோகித் சர்மாவுக்கு கிடைக்க இருக்கும் கவுரவம்

2 days ago 2

மும்பை,

மும்பை மாநில கிரிக்கெட் அணியில் இருந்து வந்து இந்திய அணியில் விளையாடி சாதித்த பல வீரர்களின் பெயரை மும்பை வான்கடே மைதானத்தின் ஸ்டாண்டுகளுக்கு பெயராக வைத்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே விஜய் மெர்ச்சென்ட், திலீப் வெங்சர்க்கார், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களின் பெயர்கள் சில ஸ்டாண்டுகளுக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளன.

அந்தப் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு 2 ஐ.சி.சி. கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவின் பெயரையும் லெவல் 3 ஸ்டாண்டுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டு ரோகித் சர்மாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read Entire Article