'வெனஸ்டே' சீசன் 2 தொடரின் டீசர் வெளியீடு

8 hours ago 4

சென்னை,

அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார்.

மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது.

இதையடுத்து, இதன் 2-வது சீசன் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது 'வெனஸ்டே' சீசன் 2 தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. இதன் முதல் பாகம் ஆகஸ்ட் 6-ந் தேதியும், இரண்டாம் பாகம் செப்டம்பர் 3-ந் தேதியும் வெளியாக உள்ளது.

Back in black. From visionary Tim Burton, Wednesday Season 2 premieres this summer. Part I August 6 Part II September 3 pic.twitter.com/Fx50nUEPFR

— Netflix (@netflix) April 23, 2025
Read Entire Article