காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 2 பேர் பலி; முதல்-மந்திரி பட்னாவிஸ் கண்டனம்

6 hours ago 3

மும்பை,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் நகர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மராட்டியத்தை சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இது குறித்து மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறுகையில்,

"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 2 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பெயர் திலீப் ஜெய்ராம் திசாலே மற்றும் அதுல் ஸ்ரீகாந்த் மோனே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 2 பேர் காயம் அடைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

Read Entire Article