வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்

2 weeks ago 5
ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே, சாக்குப் பையில் எடுத்துச் சென்ற வெங்காய வெடிகள் திடீரென வெடித்துச் சிதறியதில்  இளைஞர் ஒருவர் உடல் துண்டு துண்டாகி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் ஏலூரு கங்கம்மா கோவில் அருகே தெருமுனை ஒன்றில் 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக பெரிய சாக்குப் பை ஒன்றில் மூட்டையாகக் கட்டப்பட்ட வெங்காய வெடிகளுடன் ஸ்கூட்டரில் 2 பேர் அவர்களைக் கடந்து செல்ல முயன்றபோது, ஸ்கூட்டர் சிறு பள்ளம் ஒன்றில் ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது மூட்டையிலிருந்த வெடிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற சுதாகர் என்ற இளைஞரின் இடுப்பு வரையிலான உடல் மற்றும் கால்கள் துண்டுத் துண்டாகி பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. ஸ்கூட்டரில் சென்ற மற்றொரு இளைஞரும் தெருமுனையில் நின்று பேசிக் கொண்டிருந்த 5 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெடிகளைக் கொண்டு சென்ற ஸ்கூட்டரும் இரண்டு துண்டானது. நாட்டு வெடிகள் தீப்பற்ற வைத்தால் மட்டுமே வெடிக்கும் என்றில்லாமல், அவற்றிலுள்ள வெவ்வேறு ரசாயனங்கள் உரசும்போதும் வெடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள்,தெரிவிக்கின்றனர்
Read Entire Article