வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சிக்கன் பிரியாணி டெலிவரி; உணவக ஊழியர் கைது

1 month ago 11

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் ஸ்விகி மூலம் லக்னோயி கபாப் பரோட்டா உணவகத்தில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து, உணவ ஊழியர் அந்த வாடிக்கையாளருக்கு வெஜ்பிரியாணியை டெலிவரி செய்துள்ளார். பிரியாணி பார்சலை பிரித்து பார்த்தபோது வெஜ் பிரியாணிக்கு பதில் நான்வெஜ் சிக்கன் பிரியாணி கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரான அப்பெண் பிரியாணியை சிறிது சாப்பிட்டுள்ளார். அப்போது அது சிக்கன் பிரியாணி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, ஆர்டரை ரிட்டன் செய்ய முயற்சித்துள்ளார். அதற்குள் அந்த கடை மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்டார். வெஜ் உணவு மட்டுமே சாப்பிடும் எனக்கு வேண்டுமென்றே சிக்கன் பிரியாணி கொடுக்கபப்ட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த வீடியோ அடிப்படையில்தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வாடிக்கையாளருக்கு வெஜ்பிரியாணிக்கு பதில் நான்வெஜ் பிரியாணி பார்சல் செய்த உணவக ஊழியரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article