வெங்காய சட்னி

1 hour ago 1

தேவையான பொருட்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு
வரமிளகாய் – 7
தண்ணீர் – 1/2 கப்
வெங்காயம் – 5
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிது
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிய எலுமிச்சை அளவு புளி மற்றும் 6-7 வரமிளகாயை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு நீளமான கம்பியை எடுத்து, அதில் பெரிய வெங்காயத்தை சொருகி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் பூண்டு பற்களையும் அப்படி நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, ஊற வைத்த புளி மற்றும் வரமிளகாயை நீருடன் அப்படியே ஜாரில் ஊற்ற வேண்டும்.பின் அதில் கறிவேப்பிலை, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து பரிமாறினால், சுவையான வெங்காய சட்னி தயார்.

The post வெங்காய சட்னி appeared first on Dinakaran.

Read Entire Article