திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் துரை, அரிகிருஷ்ணன், பிரேம் குமார், தங்ககுமார், வினோத்குமார், ரீகன், சுந்தரமூர்த்தி, டில்லி, பாலு, ராஜா, ராமச்சந்திரன், கார்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் இந்த கிராம மக்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். நகர வாழ்க்கை சிறிதும் பொருந்தாத இடமாக இந்த வெங்கத்தூர் 15வது வார்டு உள்ளது. 15வது வார்டை மட்டும் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். எனவே திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உரிய ஆணை பிறப்பித்து வெங்கத்தூர் கிராமம் 15வது வார்டை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
The post வெங்கத்தூர் கிராமத்தை தனி ஊராட்சியாக்க கோரிக்கை appeared first on Dinakaran.