வேதாரண்யம், மே 21: தலைஞாயிறு ஓன்றிய திமுக இளைஞரணி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற கூட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றிய திமுக செயலாளர் மகா குமார் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு, இளைஞர் அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி மச்சழகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக தலைஞாயிறு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், துணை அமைப்பாளர்கள் பிரசாத், நவினேஷ், அருள்தாஸ், லட்சுமணன்,
இனியவன், சதீஷ்குமார், சரத், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் குணசேகரன், முன்னாள் பேரூர் வார்டு கவுன்சிலர், வார்டு கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக ஆட்சியில் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வது, மீண்டும் தமிழக முதல்வர் அறிவித்த 200 தொகுதி கைப்பற்றுவது, வேதாரண்யம் தொகுதியை மீண்டும் திமுக தொகுதியாக்க பாடுபடுவது, கிளைக் கழக அளவில் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
The post தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.