வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் தாறுமாறாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க கோரிக்கை

7 hours ago 2

கரூர், ஏப். 28: கரூர் -திருச்சி பைபாஸ் சாலையில் வெங்ககல்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் வாகன குளறுபடி ஏற்பட்டு வருவதை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர்- திருச்சி பைபாஸ் சாலையில் வெங்ககல்பட்டி அருகே திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் நான்கு சர்வீஸ் சாலைகள் உள்ளன.

கரூரில் இருந்து மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்ற காரணத்தினால், மேம்பாலத்தின் நுழைவு வாயில்களின் இரண்டு புறமும் மினி ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ரவுண்டானாவை சுற்றி செல்லாமல் நேரிடையாக மேம்பாலத்தை நோக்கி பயணிப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகிறது. மேம்பால நுழைவு வாயில் பகுதியின் இருபுறமும் இதே போன்ற நிலைதான் நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டாலும், வாகன ஓட்டிகள் அதை பின்பற்றாத காரணத்தினால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் தாறுமாறாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article