வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம்: மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிப்பு

4 hours ago 2

ராஜ்கிர்: 6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. ஆசியா சாம்பியன்ஷிப் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியின் 8வது தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நவ.11ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து என ஆறு நாடுகள் பங்கேற்றன. ரவுண்டு ராபின் முறையில் நடந்த லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அடுத்த 3 இடங்களை பிடித்த சீனா , மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் அரையிறுதிகளில் களம் கண்டன. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.

இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. இந்நிலையில் இந்திய ஆக்கி கூட்டமைப்பு பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் உள்பட அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. மேலும் பீகார் அரசும் இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், தலைமை பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

The post வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம்: மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article