‘பெரும் நிறுவனங்களிடம் வரி வசூல் செய்ய மதுரை மாநகராட்சி அஞ்சுவது ஏன்?’ -  கவுன்சிலர்கள் கேள்வியால் அமளி

3 hours ago 2

மதுரை: “பெரும் நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூல் செய்வதற்கு அதிகாரிகள் அஞ்சுவது ஏன்?" என்று மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் வாசுகி, “இந்த மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று இதுவரை 36 கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்ட 100 கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டி உள்ளது. அப்பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. கிழக்கு மண்டலத்தில் 11 கண்மாய்கள் உள்ளன. இவைதான், இப்பகுதி வார்டுகளுடைய முக்கிய நீர் ஆதாரம். இந்த கண்மாய்களை பொதுப் பணித்துறைதான் தூர்வார வேண்டும் என்று காத்து கொண்டிருக்க முடியாது” என்றார்.

Read Entire Article