சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இழப்பீடு தொகையில் பாக்கி உள்ள ரூ.3.8 கோடியை வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கை ஏற்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.