தஞ்சாவூர், ஜன.21: வீட்டுமனை பட்டா வழங்க கோரி கும்பகோணம் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் குடிசை மாற்று வாரியம் நாகேஸ்வரர் தெற்கு வீதி பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் தற்போது தற்காலிகமாக குடியிருக்கும் குடிசை மாற்று வாரியம் பழுதடைந்து உள்ளதால் அதனை இடித்து புதிதாக கட்ட கும்பகோணம் நகர ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த ஊரு இட வசதியும் இன்றி பிளாட்பாரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் போன்றவற்றில் பொழுதை கழித்து வருகிறோம்.
மேலும், நாங்கள் ஏற்கனவே மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் இலவச வீட்டு மனை வேண்டி விண்ணப்பம் கொடுத்து இருந்தோம். நாங்கள் சுமார் 30 திருநங்கைகள் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் என பலமுறை கடந்த ஆண்டுகளில் முறையிட்டும் எந்திரிந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இனியும் காலம் தாழ்த்தாமல் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள திறமைகள் ஆகிய எங்களுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வீட்டுமனை பட்டா வழங்க கோரி 30 திருநங்கைகள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.