சென்னை: அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அய்யா நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்!
அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், துடியலூர் – கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும்
அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன். அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்!
The post அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.