வீட்டில் தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை

2 months ago 15

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா மைசூரு அருகே ஆனந்தூரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது25). இவர் கேரள மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணமூர்த்தி மாதந்ே்தாறும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம் ஆகும். இந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி ஆனந்தூரு கிராமத்திற்கு வந்தார்.

இதையடுத்து அவர் அப்பகுதியில் விளையாட சென்றார். அப்போது கிருஷ்ணமூர்த்தி அங்கு நண்பர்களுடன் விளையாடினார். பின்னர் மாலை நேரத்தில் நண்பர்களுடன் கிருஷ்ணமூர்த்தி மதுகுடித்துள்ளார். அப்போது அந்த வழியாக அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வந்தார். அவளை பார்த்த கிருஷ்ணமூர்த்தி பின்னால் சென்றுள்ளார். இதனை கவனித்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு தப்பி சென்றார்.

இந்தநிலையில், மறுநாள் காலை சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணமூர்த்தி சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது சிறுமி வீட்டின் முன்பு காய போட்டிருந்த துணிகளை எடுக்க வந்தார். கிருஷ்ணமூர்த்தியை பார்்த்த அவள் கத்தி கூச்சலிட்டவாறு வீட்டிற்குள் சென்றார். ஆனால் மதுபோதையில் இருந்த அவர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் சிறுமியின் ெபற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது, சிறுமி அழுது கொண்டு இருந்தார். இதனை பார்த்த பெற்றோர் எதற்காக அழுகிறாய் என கேட்டனர். அதற்கு அவள் தனக்கு நடந்த கொடுமைகளை கூறினார். இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கே.ஆர்.எஸ். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Read Entire Article