
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளான, சிறுமங்கலம், பாண்டியகுப்பம், தொட்டியம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான பூமிகா, கல்லூரியில் பயின்று வரும் சந்தியா, 19 வயதான தனுஜா மற்றும் பவித்ரா ஆகிய நான்கு இளம்பெண்கள் மாயமாகியுள்ளனர்.
நான்கு பேரும் வெவ்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள். வெவ்வேறு நேரத்தில் காணாமல் போயுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படை அமைத்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.