
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது
அதனை தொடர்ந்து அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த பந்தயத்தில் போது ரேஸ் டிராக்கில் சென்று கொண்டிருந்த அஜித்குமார் காரின் முன்பக்க டயர் வெடித்தது. டயர் வெடித்து புகை எழுந்த நிலையில், நடிகர் அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பினார். அதன் பின்னர் கிரேன் உதவியுடன் பந்தய டிராக்கில் இருந்து கார் அப்புறப்படுத்தப்பட்டது.