வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் பலி

1 day ago 2

தானே,

மராட்டிய மாநிலத்தில் கசாராவில் உள்ள வாஷாலா பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தத்தா பூலேவின் வீட்டில் திடீரென தீ ஏற்பட்டது. இந்த தீயை அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்ற சில உள்ளூர் சிறுவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து வீட்டிற்குள் உள்ள அறை ஒன்றில் 3 வயது சிறுவன் தீயில் கருகிய நிலையில் கிடப்பதை பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விபத்து தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணா பூலே என்கிற சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Read Entire Article