
புதுடெல்லி,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 28ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.
இந்நிலையில், இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய டி20 அணியில் அதிரடி ஆட்டக்காரரான ஷபாலி வர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
இந்திய டி20 அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா ஹோஷ் (விக்கெட் கீப்பர்), யாஷ்திகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஹார்லீஜ் தியோல், தீப்தி சர்மா, ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமஞ்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்காரே.
இந்திய ஒருநாள் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா ஹோஷ் (விக்கெட் கீப்பர்), யாஷ்திகா பாடியா (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹஸாப்னிஸ், தீப்தி சர்மா, ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமஞ்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்காரே.