“விஷமத்தனமான சித்தாந்தத்தை விதைக்கவே பாஜக இந்தியை திணிக்கிறது” - கார்த்தி சிதம்பரம்  

1 week ago 2

சிவகங்கை: “விஷமத்தனமான சித்தாந்தத்தை விதைக்கவே பாஜக இந்தியை திணிக்கிறது” என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். மேலும், “பாஜக எத்தனை கையெழுத்து இயக்கம் நடத்தினாலும், அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை” என்று அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கையே தேவையில்லை. அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் படித்தாலே போதும். பாஜகவை தவிர தமிழகத்தில் மற்ற கட்சிகள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர்.

Read Entire Article