சாத்தூர், ஜூன் 24: சாத்தூர் பகுதியில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகள் நில உடமை விபரங்களை அனைத் கிராமங்களில் தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்து வருகின்றனர். வரும் காலங்களில் மத்திய மாநில அரசு மற்றும் தோட்க்கலைத்துறையால் விவசாயிகளுக்கு செயல்படுத்தபடும் திட்டங்களான பி.எம்.கிஸான், பிரதம மந்திரி விவசாய காப்பீட்டு திட்டம் அனைத்தும் திட்டங்களும் நில உடமை பதிவு பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் கிடைக்கும். எனவே, விசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பி எம்.கிஸான் கவுரவ ஊக்கத்தொகை பெற்றுக் கொண்டு வரும் விவசாயிகள் தங்களின் நில உடமைகளை பதிவு செய்யாவிட்டால், அடுத்த தவனை முதல் ஊக்க தொகை கிடைக்காது என சாத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
The post விவசாயிகள் நில உடைமை பதிவு ஜூலை 15 வரை கால நீட்டிப்பு appeared first on Dinakaran.