சேலம்: ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் வரும் 7, 8, 9, 10ம் தேதிகளில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் ரயில்வே சிக்னல் மாற்றியமைக்கும் பணிகள் நடக்கவுள்ளது. இதனால், இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் குறிப்பிட்ட நாட்கள், மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) வரும் 7, 8, 9, 10ம் தேதிகளில் ஈரோட்டில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில் (56107) வரும் 7, 8, 9, 10ம் தேதிகளில், ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, திருப்பத்தூரில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டிற்கு இயக்கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post வரும் 7, 8, 9, 10ம் தேதிகளில் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் திருப்பத்தூர் வரையே இயங்கும் appeared first on Dinakaran.