கோவை: விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கில், ‘பாரதத்துக்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 20.2 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியா உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.