காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கி அரசாணை பிறப்பித்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு

2 hours ago 1

மதுரை: காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கி அரசாணை பிறப்பித்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். காவலர்களின் உடல்நலம் மனநலத்தை பேணும் வகையில் வார விடுப்பு வழங்கி முதல்வர் அறிவித்துள்ளார்.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை எதிர்த்து, மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அரசாணை ஏன் பின்பற்றப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது. தமிழக காவல்துறை டிஜிபி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காவலர்கள் அதிக பணிச்சுமை காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக கூறினார். மேலும், 2021-ஆம் ஆண்டு காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். அப்போது, அரசாணை ஏன் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் இருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று நீதிபதி கூறினார். மற்ற காவலர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? இது மேலதிகாரிகளின் மீதான அச்சமா? இது வியப்பாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அனைவருக்கும் தானே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது. ஆனால் இங்கு மட்டும் போலீசாருக்கு இது வரை சங்கம் இல்லாதது ஏன்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கையில் காவல்துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதல்வரின் உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லையா? 2021இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப் படுத்தப்படவில்லையெனில் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் காவலர்களுக்கான வார விடுமுறை அரசாணையை முறையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். வர விடுமுறை வழங்க தவறுபட்சத்தில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். மதுரையை சேர்ந்த காவலர் செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

 

The post காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கி அரசாணை பிறப்பித்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article