விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

9 hours ago 3

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை சேர்ந்த வேதாசலம் என்பவரின் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக வண்டலூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத வகையில் அந்த பசு மாடு வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதனைகண்ட, அப்பகுதி மக்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியோடு அந்த பசுமாட்டை ஒரு மணி நேரமாக போராடி மீட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article