
விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் இளங்கோ (33 வயது). பெட்டிக்கடை வைத்துள்ள இவருக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு இளங்கோ, தனது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.