கேட் விழுந்து 2 பேர் பலி - பொள்ளாச்சியில் சோகம்

4 hours ago 2

கோவை,

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக தனியார் நிறுவன மேலாளர் எபனேசர் கிருபாகரன், உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்களை கவன குறைவாக, அஜாக்கிரதையாக, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய அனுமதித்ததாக மேலாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article