மனைவிக்கும் தனக்குமான வயது வித்தியாசம் குறித்து 'ஆவேஷம்' பட வில்லன் பேச்சு

4 hours ago 2

சென்னை,

கடந்த ஆண்டு வெளியான 'ஆவேஷம்' படத்தில் 'குட்டி' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தவர் மிதுட்டி .

இவர் தற்போது பைசல் பாசிலுதீன் இயக்கத்தில் 'மைனே பியார் கியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 32 வயதாகும்நிலையில், 23 வயதாகும் பார்வதி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இதனால், பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், வயது வித்தியாசம் தனக்கு ஒரு பிரச்சினை இல்லை என்று மிதுட்டி கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,

"எங்களுக்கு ஒன்பது வயது வித்தியாசம். அவருக்கு 23 வயது, எனக்கு 32 வயது. ஆனால் அது எங்களுக்கு ஒரு பிரச்சினையாக ஒருபோதும் தோன்றியதில்லை.

நாங்கள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் ஒன்றாக வாழ விரும்புகிறோம். மற்றவர்கள் சொல்வதை நாங்கள் கவனிப்பதில்லை. அவர்கள் பேசட்டும். நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒன்றாக வாழ்வது நாங்கள்தான்," என்றார்

Read Entire Article