விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

18 hours ago 2

விழுப்புரம்,

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சித்திரை முழு நிலவு மாநாட்டையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 63 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article