'டிடி நெக்ஸ்ட் லெவல்' - 'சினிமாகாரன்' பாடல் வெளியீடு

4 hours ago 3

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இப்படத்தின் 'சினிமாகாரன்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

A meratalaana gaana, introducing Hitchcock Iruthyaraj #Cinemakaran Lyric Video OUT NOW▶️ https://t.co/whVniBPMSX An @ofrooooo Musical#DevilsDoubleNextLevelFromMay16@iamsanthanam @arya_offl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 pic.twitter.com/uTVKeYCGfz

— TheShowPeopleoffl (@TSPoffl) May 4, 2025
Read Entire Article