பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை தரப்பில் அதிரடியாக ஆடிய இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதையடுத்து அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் தன்னை நேரில் அழைத்த தோனி எவ்வாறு அழைத்தார் என்பது குறித்து ஆயுஷ் மாத்ரே மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில்,
நேற்றைய (பெங்களூருக்கு எதிரான ஆட்டம்) போட்டி முடிந்த பின்னர் என்னை மகிபாய் "சாம்பியன்" என்று அழைத்தார். ஆனால் அவர் ஏன் என்னை அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் அப்படி என்னை அழைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது என ஆயுஷ் மாத்ரே கூறியுள்ளார்.