விழுப்புரத்தில் மருத்துவ சேவை வழங்க சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

2 months ago 9


சென்னை: வேளச்சேரி ராம்நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ .5 லட்சம் காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உயிரிழந்த சக்திவேலுவின் பெண் பிள்ளை பள்ளி படிப்பை முடிக்கும் வரை மாமன்ற உறுப்பினர் தேவையான உதவிகளை வழங்குவார். அதற்கு பிறகு கல்லூரிகளில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அனைத்து உதவிகளும் கிடைக்கும். மழைக்கால சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 524,21 மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அதில் 28,42,508 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று 500 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி காய்ச்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு முகாம்களில் தங்கவைத்து இருக்கும் நபர்களுக்கு மருத்துவ சேவை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விழுப்புரத்தில் மருத்துவ சேவை வழங்க சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article