சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீஸாரை இழுத்துச் சென்று, அப்புறப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்தது. அப்போது, இருவேல்பட்டு உள்ளிட்ட 18 கிராம மக்கள் தங்களுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை என்று கூறி, டிச. 3-ம் தேதி திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.