பருவ வயதுடையவர் முதல் பல் போன பாட்டன் வரை தமிழில் மிகவும் பிடித்த வார்த்ைத எது தெரியுமா? வேறென்ன காதல்தான்… ‘‘அட.. வருஷத்துக்கு ஒருமுறைதான் இந்த காதலர் தினம் வருது… அட உனக்கு, எனக்கு மட்டும்தான் அது வருஷம் பூரா வருது…’’ என்றார் ஒரு திரைக்கவிஞர். உண்மைதான்… இதுதான் உண்மை காதலும் கூட. இன்று காதலர் தினமாக கொண்டாடும் பிப். 14 மட்டுமின்றி, பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் காதலுடன் பிறந்தால், இருந்தால் வாழ்க்ைக நல்லாயிருக்கும் பாஸ்…! ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்து ஆன்ட்ராய்ட் காலத்திற்கு மாறினாலும், பெற்றோருக்கு பிடிக்காத ஒரு வார்த்தை இருக்கு… அது என்ன தெரியுமா? அதுவும் காதல் தான்.. வேறென்ன… ‘நான்.. நான் ஒரு பொண்ணை / அல்லது / நான் ஒரு பையனை… கா… காத…’ – லிக்கிறேன் என்று சொல்லத் தொடங்கும் முன்பே, ‘‘ஓஹோ.. துரை தனியாய் பொண்ணு தேடுற அளவுக்கு, வீட்ல பெரிய ஆளாய் ஆயிட்டாேரா…’’ என்று மகனையும், ‘‘ம்ம்…
உன்னை எல்லாம் இப்ப வரை சின்ன பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்… நீயுமா இப்படி…’’ என வீட்டில் சண்டை கட்டி ஏறும் குடும்பங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. தொடர் எதிர்ப்பு.. அடுத்து என்ன? உங்களுக்கே தெரியும். எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணுவாங்க… ஆதரவுக்கு மனம் ஏங்கும். சில குடும்பத்துல காலம் கடந்து ஏத்துக்குவாங்க.. பல இடத்துல கடைசிவரை பெற்றோர் எதிர்ப்பாகவே இருப்பாங்க… பல இடத்துல நம்பி வந்த பெண்ணை ஏமாற்றி, பலாத்காரம் செய்து ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆணவக்கொலைகளும் அரங்கேறுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். காதல் தவறல்ல… இதுவும் ஒருவகை தேர்வு போலத்தான்… சரியான நபரை தேர்ந்தெடுத்து காதலை சொல்ல வேண்டும். அல்லது காதலராகவோ / காதலியாகவோ ஏற்க வேண்டும். இவர் நம்மை கடைசி வரை அன்பாய் கவனித்துக் கொள்வார்.
கண் கலங்காமல் காப்பாற்றுவார் என்ற எண்ணம் இருதரப்புக்கும் தோன்ற வேண்டும். பெற்றோர் மனம் நோகாதவகையில் அதை பக்குவமாக எடுத்து சொல்லி சம்மதம் பெற வேண்டும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். வாலிப பருவத்தில் மட்டும் வந்து செல்வது காதல் அல்ல… வயோதிக பருவத்திலும் ஒருவருக்கு ஒருவர் மாறாத அன்பு செலுத்த வேண்டும். இது காதல் திருமணம், வீட்டு திருமணம் என இரண்டுக்குமே பொதுவாக பொருந்தும். ஆதலினால் காதல் செய்வீர்… உண்மையாக…!
நிறமே… நிறமே…நிறமே… காதலை கூறும் நிறமே…!
காதலக்கு நான் முழுமனதுடன் தயாராக இருக்கிறேன். என்னை ஏற்றுக் ெகாள்ளுங்கள் என்று சொல்லும் சம்மத தினம் என்றும் கூறலாம். காதல் ரோஜாவே…!
வெள்ளைப்புறா ஒன்று…: ஏற்கனவே செட் ஆயிருச்சும்மா… வாங்களேன் அன்பு மழையில் நனைவோம்… ஜாலியாக பழகுவோம். பிடிச்சாய் நண்பர்களாய் தொடருவோம் – இதுதான் இவர்கள் பாலிசி.
நீலவான ஓடையில்…: சிங்கிளா இருக்கேன்.. வந்து மிங்கிள் ஆகுறவங்க வாங்க… லவ்வை ஸ்டார்ட் பண்ணலாமென தயார்நிலையில் இருப்பவர்…
மஞ்சள் வெயில்…: ‘இவர்களது மனநிலையை யாராலுமே புரிஞ்சிக்க முடியாது. நல்ல துணை கிடைத்தாலும், அதை தக்க வைத்துக் கொள்ள மாட்டார்கள். பிடித்த வார்த்ை பிரேக் – அப்.
கருப்பு நிலா…: காதல் தோல்வி அடைந்து கலங்கி நிற்பவர்கள்… தவறிப்போய் ப்ரபோஸ் பண்ணாதீங்க.. பண்ணீங்க அவ்வளவுதான்… ஒருவிதமான இறுக்க மன நிலை கொண்டவர்கள்.
முடிவு பண்ணிட்டீங்களா… இன்று என்ன கலர் டிரஸ் போடுவது என்று….
The post விழியிலே மலர்ந்தது… உயிரிலே கலந்தது…! இன்று காதலர் தினம் appeared first on Dinakaran.